ஓணம் பண்டிகை: புதுச்சேரி – மாஹே இடையே சிறப்பு பேருந்துகள் இயக்கம்
புதுச்சேரி, ஆக. 24: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரியில் இருந்து மாஹேவுக்கும், மாஹேவில் இருந்து புதுச்சேரிக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, புதுச்சேரியிலிருந்து மாஹேவிற்கு ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மாலை 6.00 மணிக்கு சிறப்புப் பேருந்துகள் புறப்படும். அதேபோல், திரும்புவதற்கு வசதியாக ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மாஹேவிலிருந்து புதுச்சேரிக்கு மாலை 5.00 மணிக்கு பேருந்துகள் இயக்கப்படும். இப்பயணத்திற்கான கட்டணம் ரூ.770 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் இந்த சிறப்பு பேருந்து பயணத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான முன்பதிவு வசதி புதுச்சேரி பேருந்து நிலையம் மற்றும் மாஹே கழக முன்பதிவு அலுவலகங்களில் செய்யப்பட்டுள்ளது. பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இயக்கப்படும் இந்த கூடுதல் பேருந்து வசதியை பயணிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.