தமிழ்நாடு
சென்னையில் நான்கு சர்வதேச நிறுவனங்களுடன் முதலீட்டு ஒப்பந்தங்கள்: முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்து

சென்னையில் ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற முதலீட்டு நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில் பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் வழிகாட்டி நிறுவனம் (Guidance Tamil Nadu) அலுவலகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த Chubb, ஜெர்மனியைச் சேர்ந்த Nordex, மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், தென் கொரியாவின் MotiveLink ஆகிய நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தித் துறை மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளை இந்த முதலீட்டு ஒப்பந்தங்கள் உள்ளடக்கியுள்ளன.



