லாஸ்பேட்டையில் 13வது தேசிய வேக ரோலர் ஸ்கேட்டிங் போட்டி: 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு
இந்திய ரோலர் ஸ்கேட்டிங் கூட்டமைப்பு மற்றும் பாண்டிச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் இணைந்து நடத்தும் 13வது வேக ரோலர் ஸ்கேட்டிங் தரவரிசைப் போட்டி (Speed Ranking Championship 2026), புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு ஸ்கேட்டிங் மைதானத்தில் ஜூலை 30ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மூன்றாம் நாள் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. தமிழ்நாடு, கேரளம், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 1000க்கும் மேற்பட்ட ஆண், பெண் வீரர்கள் சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவுகளில் வேகப் போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகள் நிறைவடைந்ததையடுத்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில், சீனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
குடும்பத்தினருடன் வந்திருந்த ரசிகர்கள் மைதானம் முழுவதும் உற்சாகக் கோஷங்கள் எழுப்பியதால், போட்டிச் சூழல் விளையாட்டுத் திருவிழா போல் அமைந்தது.

