புதுச்சேரி

புதுச்சேரி இ.எஸ்.ஐ பயனாளிகளுக்கு ஜிப்மரில் பணமில்லா சிகிச்சை: முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!

புதுச்சேரி: புதுச்சேரியில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழக (ESIC) பயனாளிகளுக்கு புகழ்பெற்ற ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையில் உயர்தர பணமில்லா மருத்துவ சிகிச்சை (Cashless Healthcare Services) வழங்குவதற்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் புதுச்சேரி இ.எஸ்.ஐ.சி மண்டல அலுவலகமும், ஜிப்மர் மருத்துவ நிறுவனமும் இணைந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம், புதுச்சேரி இ.எஸ்.ஐ திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தொழிலாளர்கள், நிறுவன ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் ஜிப்மர் மருத்துவமனையில் அனைத்து விதமான சிறப்பு சிகிச்சைகளையும் பணமில்லா முறையில் பெற முடியும்.

தொழிலாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தரமான, நவீன மற்றும் மலிவான மருத்துவ சேவைகளை தடையின்றி வழங்குவதை இந்த ஒப்பந்தம் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு இந்த நடவடிக்கை பெரும் நிம்மதியையும் பாதுகாப்பையும் அளித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன