தமிழ்நாடு

மேகதாது அணைக்கு எதிராக சென்னையில் அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்; சீமான் கண்டன உரை

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சியைக் கண்டித்தும், தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரை வழங்க மறுப்பதாகக் குற்றம் சாட்டியும் சென்னை எழும்பூரில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் பங்கேற்றன.

ஆடி 22ஆம் நாளான ஆகஸ்ட் 7, வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் ராஜரத்தினம் விளையாட்டுத் திடல் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கண்டன உரையாற்றினார்.

மேகதாது அணைத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும், தமிழக அரசு காவிரி நீர் உரிமையைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன