புதுச்சேரி

ஏனாமில் கோதாவரி வெள்ளப்பெருக்கு: தாழ்வான பகுதிகளில் நீர் புகுந்தது

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியில் கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோதாவரி ஆற்றங்கரை முழுவதும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாழ்வான குடியிருப்புகள், வயல்வெளிகள் மற்றும் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ள நிலையில், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டும் என உள்ளூர் நிர்வாகமும் காவல்துறையும் அறிவுறுத்தி வருகின்றன.

ஆற்றங்கரைப் பகுதிகளில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், வெள்ள நீர் நிரம்பிய இடங்களுக்குச் செல்லாமல் இருக்கவும் அரசு மற்றும் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன