புதுச்சேரி

புதுவை பல்கலைக்கழகத்தில் காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாடு: துணைவேந்தர் தொடங்கி வைத்தார்

புதுச்சேரி, ஆக. 27: புதுவை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சார்பில், “காலநிலை மாற்றம் மற்றும் பொருளாதாரம்: வணிகம் மற்றும் சமூகம் மீதான அதன் தாக்கம்” என்ற தலைப்பிலான சர்வதேச மாநாடு பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டை புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி. மதுவந்தி முறைப்படி தொடங்கி வைத்தார்.

இம்மாநாட்டில் கல்வியாளர்கள், பொருளாதார ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு துறைசார் வல்லுநர்கள் கலந்துகொண்டனர். இன்றைய சூழலில் காலநிலை மாற்றத்தால் சமூக மற்றும் பொருளாதார அமைப்புகளில் ஏற்படும் பாதிப்புகள், வேளாண் உற்பத்தி, தொழில்துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் நிர்வாக நடைமுறைகளில் உருவாகி வரும் சவால்கள் குறித்து பல்வேறு அமர்வுகளில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், சுற்றுச்சூழல் மாறுபாடுகளின் பொருளாதார விளைவுகள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான கொள்கை அளவிலான தீர்வுகள் தொடர்பாக ஆய்வாளர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் சங்கரன், கிருஷ்ணராஜ், ராஜன், துளசி பிருந்தா, நிராஜன் மற்றும் மேலாண்மைப் பள்ளியின் புல முதன்மையர் பேராசிரியர் கலாநிதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன