புதுச்சேரி

கதிர்காமம் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு: 4,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

புதுப்பிக்கப்பட்ட கதிர்காமம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்வில் மொத்தம் 4,000 பொதுமக்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கதிர்காமம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அழகு என்ற அழகானந்தம் முன்னிலையில், புதுச்சேரி முதல்வர் ந. ரங்கசாமி கலந்து கொண்டு பயனாளர்களுக்கு நலத்திட்டப் பொருட்களையும் நிதி உதவிகளையும் வழங்கினார்.

விழாவில் முன்னாள் அமைச்சர் லட்சுமி நாராயணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா. பாஸ்கர் என்ற தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். புதிய அலுவலகம் மூலம் மக்கள் சேவை மேலும் விரிவடைய வேண்டும் என்று அவர்கள் வாழ்த்தினர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள், சமூக அமைப்புகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் அழகானந்தம், கதிர்காமம் தொகுதி மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து செயல்படுவதாகக் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *