மணவெளியில் விமரிசையாக நடந்த விநாயகர் சிலை ஊர்வலம்: பாமக நிர்வாகக் குழு தலைவர் கோ. கணபதி தொடங்கி வைத்து சீருடை வழங்கினார்!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் மணவெளி கிராமத்தில் ஊர் இளைஞர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விநாயகர் சதுர்த்தி விழா சிலை ஊர்வலப் புறப்பாடு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழு தலைவர் கோ. கணபதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
ஊர்வலத்தை முறைப்படி தொடங்கி வைத்த பாமக நிர்வாகக் குழு தலைவர் கோ. கணபதி, விநாயகர் சிலை ஊர்வலப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்ட கிராம இளைஞர்களுக்குத் தனது சொந்த சார்பில் சீருடைகளை வழங்கி உற்சாகப்படுத்தினார். ஆன்மீக உணர்வுடனும் அமைதியான முறையிலும் விழாவினை நடத்திட இளைஞர்களுக்கு அவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பாமக மணவெளி தொகுதி செயலாளர் முருகன், வன்னியர் சங்க தொகுதி செயலாளர் ஆனந்தராஜ், தொகுதி துணைத் தலைவர் மணிகண்டன், வன்னியர் சங்க பொறுப்பாளர் மணிரத்னம், விழா ஏற்பாட்டாளர் சந்துரு, ஜி.ஜி. சிங்காரவேலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், ஊர் பெரியவர்கள் மற்றும் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.