தமிழ்நாடு

வாழப்பாடியில் 25,000 மரக்கன்றுகள் நடும் விழா: லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தொடங்கி வைத்தார்!

சேலம் மாவட்டம், ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாழப்பாடியில் லட்சிய ஜனநாயக கட்சியின் சுற்றுச்சூழல் அணி சார்பில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பிரம்மாண்ட விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் முக்கிய பிரமுகர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நேரில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் தமிழகப் பொதுச்செயலாளர் நெல்லை ஜீவா மற்றும் துணைப் பொதுச்செயலாளர் ஜெயகாந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர். சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணவும், பசுமைப் போர்வையை விரிவுபடுத்தவும் கட்சித் தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து இந்த மாபெரும் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.

பசுமை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் லட்சிய ஜனநாயக கட்சியின் முக்கிய நிர்வாகிகள், சுற்றுச்சூழல் அணியினர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு மரக்கன்றுகளை ஆர்வத்துடன் நட்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன