முத்துப்பேட்டையில் 34-ஆம் ஆண்டு வெற்றி விநாயகர் சதுர்த்தி விழா: எம்.எல்.ஏ மீனாட்சிசுந்தரம், இயக்குநர் மோகன் ஜி பங்கேற்பு!

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டையில் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் 34-ஆம் ஆண்டு வெற்றி விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விநாயகர் சிலை ஊர்வலம் பக்தி சிரத்தையுடன் கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழா திரு. கருப்பு முருகானந்தம் அவர்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் மற்றும் பிரபல திரைப்பட இயக்குநர் மோகன் ஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
விழாவையொட்டி வெற்றி விநாயகருக்குச் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிரம்மாண்ட ஊர்வலத்தில் முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.



