புதுச்சேரி குமரகுருநகரில் 26-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா: 4-ஆம் நாள் அன்னதான பிரசாத விநியோகம்!

புதுச்சேரி, ஆக. 31: புதுச்சேரி குமரகுருநகர் பகுதியில் 26-ஆம் ஆண்டு ஸ்ரீ மணக்குள விநாயகர் சதுர்த்தி விழாக் குழுவின் சார்பில் சதுர்த்தி உற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விழாவின் நான்காம் நாள் அன்னதான பிரசாத விநியோகம் திரளான பக்தர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது. காலையிலிருந்தே அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.
நான்காம் நாள் விழாவில் காலை நேரப் பிரசாத உபயத்தை விழா குழு தலைவர் லாஸ்பேட்டை திரு. செல்வம் ஆசாரி குடும்பத்தினர், மீரான் சாஹிப் வீதியைச் சேர்ந்த திரு. S. சதாசிவம் குடும்பத்தினர் மற்றும் அண்ணாசாலையைச் சேர்ந்த செல்வா ஸ்டோர் மதன் குடும்பத்தினர் ஆகியோர் முன்னின்று வழங்கினர். தொடர்ந்து மதிய அன்னதான பிரசாத உபயத்தை அந்தோனியார் கோவில் வீதியைச் சேர்ந்த திரு. S. பாலமுருகன் குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து இரவு நேரப் பிரசாத உபயத்தை அந்தோனியார் கோவில் வீதியைச் சேர்ந்த திரு. P. இராமன் குடும்பத்தினர், எஸ்.ஆர். முருகேசன் பேட்ஜ் ஒர்க்ஸ் திரு. S. முருகேசன் குடும்பத்தினர் மற்றும் மீரான் சாஹிப் வீதியைச் சேர்ந்த திரு. R. விஜய் குடும்பத்தினர் ஆகியோர் பக்தர்களுக்கு வழங்கினர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் குமரகுருநகர் ஸ்ரீ மணக்குள விநாயகர் சதுர்த்தி விழாக் குழுவினர் மற்றும் பகுதி மக்கள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.



