புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்: முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் வேட்பாளர் அறிமுக ஆலோசனைக் கூட்டம்; பாமக நிர்வாகிகள் பங்கேற்பு!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் களப்பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் ந. ரங்கசாமி அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், மாநில அமைப்பாளர் கோ. மதியழகன் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் மாநில வன்னியர் சங்கத் தலைவர் வடிவேல் கவுண்டர், பாமக மாநில ஆலோசகர் கோபி (எ) கோபாலகிருஷ்ணன், நிர்வாகக் குழு தலைவர் கோ. கணபதி மற்றும் மண்டல துணை அமைப்பாளர் கதிரேசன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி, வெற்றியை உறுதி செய்வது குறித்தும், கூட்டணிக் கட்சியினரின் ஒருங்கிணைந்த களப்பணிகள் குறித்தும் முதலமைச்சர் ரங்கசாமியுடன் பாமக நிர்வாகிகள் விரிவாக ஆலோசனை மேற்கொண்டனர். இடைத்தேர்தல் களம் தீவிரமடைந்து வரும் சூழலில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன