புதுச்சேரி

மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் முன்னாள் தலைவர் மறைந்த கேசவன் நினைவு தினம் அனுசரிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீ மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் முன்னாள் தலைவர் மறைந்த திரு. கேசவன் அவர்களின் நினைவு தினம் இன்று கல்வி நிறுவன வளாகத்தில் பயபக்தியுடன் கடைபிடிக்கப்பட்டது.

இந்நிகழ்வையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகிகள், கல்லூரி முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினர். கல்வித்துறையில் அவர் ஆற்றிய அரும்பணிகள் மற்றும் கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் இந்நிகழ்வில் நன்றியோடு நினைவு கூரப்பட்டன.

புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மாணவ-மாணவிகளுக்கு தரமான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஸ்ரீ மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தை முன்னெடுத்துச் சென்றதில் மறைந்த தலைவர் கேசவன் அவர்களின் தொலைநோக்குப் பார்வை மிக முக்கியமானதாக அமைந்தது என்று நிகழ்வில் பங்கேற்றோர் புகழாரம் சூட்டினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன