உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு முதலமைச்சர் ரங்கசாமி நேரில் பிறந்தநாள் வாழ்த்து!

புதுச்சேரி: புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்களின் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் ந. ரங்கசாமி அவர்கள் அவரை நேரில் சந்தித்து தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வரும் ஆ. நமச்சிவாயம் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனையொட்டி அமைச்சரின் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் ந. ரங்கசாமி, அவருக்கு பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து வழங்கி இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.
உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பிறந்தநாளையொட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் அவரை நேரில் சந்தித்தும், தொலைபேசி வாயிலாகவும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.



