தமிழகத்தில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.25 வரை உயர்வு: பொதுமக்கள் கவலை
தமிழ்நாட்டில் பொன்னி, கிச்சடி பொன்னி மற்றும் இட்லி அரிசி உள்ளிட்ட அனைத்து வகை அரிசி விலையும் கடந்த 15 நாட்களில் கிலோவுக்கு ரூ.20 முதல் 25 வரை உயர்ந்துள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் அணை சீரமைப்புப் பணிகளால் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டதால், அம்மாநில வியாபாரிகள் தமிழகத்தில் அதிக விலை கொடுத்து நெல்லை கொள்முதல் செய்ததே விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என மொத்த வியாபாரிகள் கூறுகின்றனர். இதனால் தமிழகத்தில் உள்ள 50% அரிசி ஆலைகள் நெல் இன்றி இயங்கவில்லை. மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடியும் குறைந்து, ஒரு மூட்டை அரிசி ரூ.2000 வரை உயர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
Rice prices across Tamil Nadu have surged significantly over the past 15 days, with costs rising by Rs 20 to Rs 25 per kilogram. Wholesale traders attributed the sharp increase to heavy purchasing by traders from neighboring states like Andhra Pradesh and Karnataka, where paddy cultivation suffered due to dam repair works. Consequently, around 50% of rice mills in Tamil Nadu remain non-operational due to paddy scarcity. Traders warned that with reduced Kuruvai cultivation following non-release of Mettur dam water, a 26-kg rice bag could soon cost up to Rs 2,000.
