தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் வேண்டும்: எம்.எல்.ஏ. ராமு வலியுறுத்தல்!
புதுச்சேரி: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிருக்கான இலவச அரசு பேருந்து பயணத் திட்டத்தை, புதுச்சேரி மாநிலத்திலும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று எம்.எல்.ஏ. ராமு வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், பெண்களின் பொருளாதார தன்னிறைவுக்கும், தினசரி பயணச் சுமையைக் குறைப்பதற்கும் மிக உதவியாக இருந்து வருகிறது. இத்திட்டம் பெண்களின் வாழ்வாதார முன்னேற்றத்தில் முக்கியப் பங்காற்றி வருவதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் ஆயிரக்கணக்கான பெண்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் உழைக்கும் மகளிர் தினசரி பேருந்து பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக மகளிர் நலனைக் கருத்தில் கொண்டு, அரசு பேருந்துகளில் (பிஆர்டிசி) பெண்களுக்கு கட்டணமில்லா இலவச பேருந்து பயணத் திட்டத்தை அறிவித்து செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.