தமிழ்நாடு

சென்னை – கன்னியாகுமரி இடையே 8 வழிச்சாலை: விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தீவிர நடவடிக்கை!

சென்னை: தமிழகத்தில் தலைநகர் சென்னை முதல் தென்முனையான கன்னியாகுமரி வரை அதிநவீன வசதிகளுடன் புதிய 8 வழிச்சாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கும் பணிகளைத் தொடங்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, சரக்கு போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் பயணத் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அடுத்த 30 ஆண்டுகளுக்கான போக்குவரத்து வளர்ச்சியை கருத்தில் கொண்டும், எதிர்கால நெரிசலுக்கு நீண்டகாலத் தீர்வு காணும் வகையிலும் இந்த மெகா 8 வழிச்சாலைத் திட்டம் திட்டமிடப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இத்திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறுகள் மற்றும் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்ட பின்னர், சாலைக்கான நில அமைப்பு மற்றும் வழித்தடங்கள் இறுதி செய்யப்படும். இத்திட்டம் முழுமைபெறும் பட்சத்தில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கான பயண நேரம் பெருமளவு குறைவதோடு, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியும் புதிய வேகத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன