புதுச்சேரி

புதுச்சேரி எல்லையில் ரவுடி வெடிகுண்டு வீசி படுகொலை: கூட்டாளிகள் கைவரிசை

கடலூர் மாவட்டம் பெரிய காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி சசிகுமார் புதுச்சேரி உருவையார் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் ரங்காரெட்டி பாளையம் அருகே காரை கழுவிக் கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் அவர் மீது வெடிகுண்டுகளை வீசியது. தப்பி ஓட முயன்ற சசிகுமாரை வயல்வெளியில் விரட்டிச் சென்று கத்தியால் வெட்டி படுகொலை செய்தனர். தகராறு காரணமாக அவருடைய கூட்டாளிகளே இந்த கொலையை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பிய மற்றொரு நபரான ராஜாவை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

In brief (English)

A rowdy named Sasikumar was murdered near the Puducherry-Cuddalore border after an armed gang hurled country bombs and attacked him with sickles. Police suspect internal disputes among gang members as the motive.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன