புதுச்சேரி

தாயின் இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி: சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், தாயின் பிறப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு சாதிச் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் வசிக்கும் குடும்பங்களில் தாயின் பிறப்பிடத்தை முதன்மையாகக் கொண்டு குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்றும், தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்தி பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி எவ்வித காலதாமதமும் இன்றி தகுதியானவர்களுக்கு சான்றிதழ்கள் விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன