உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள்: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி உற்சாக கொண்டாட்டம்!

புதுச்சேரி: புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்களின் பிறந்தநாளையொட்டி, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சுல்தான்பேட்டையில் சிறப்பாக நடைபெற்றது.
ஜி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்த புண்ணியகோடி அவர்களின் ஏற்பாட்டில், சுல்தான்பேட் முத்துகுமரன் மஹாலில் இந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழா ஒருங்கிணைக்கப்பட்டது. இந்நிகழ்வில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் மற்றும் அவரது துணைவியார் திருமதி வசந்தி நமச்சிவாயம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
விழாவில் அமைச்சர் ஆ. நமச்சிவாயம் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியதுடன், அங்கு திரண்டிருந்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கி வாழ்த்தினார். தனது பிறந்தநாளை மாணவர்களுடன் இணைந்து பயனுள்ள முறையில் உற்சாகமாகக் கொண்டாடிய அமைச்சருக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
