புதுச்சேரி

விளையாட்டுகளின் எண்ணிக்கை 65-லிருந்து 35 ஆகக் குறைப்பா? புதுச்சேரி அரசுக்கு சுவாமிநாதன் கடும் கண்டனம்!

புதுச்சேரி: புதுச்சேரி அரசு அண்மையில் வெளியிட்டுள்ள அரசாணை (G.O.Ms.No.76) என்பது சீர்திருத்தம் அல்ல, மாறாகப் புதுவை விளையாட்டு வீரர்களுக்குச் செய்யப்பட்ட மாபெரும் துரோகம் என்று தேசிய மக்கள் முன்னணி தலைவர் சுவாமிநாதன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி அரசால் இதுவரை அங்கீகரிக்கப்பட்டு வந்த விளையாட்டுகளின் மொத்த எண்ணிக்கை 65-ஆக இருந்த நிலையில், தற்போதைய புதிய அரசாணை மூலம் அது 35-ஆக அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்தத் தவறான முடிவால், விடுக்கப்பட்ட மீதமுள்ள 30 விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இரவு பகல் பாராமல் முறையாகப் பயிற்சி பெற்று, தேசிய அளவில் புதுச்சேரிக்குப் பெருமை தேடித்தந்த வீரர்களின் உழைப்பிற்கு அரசு அளிக்கும் பரிசு இதுதானா என்று கேள்வி எழுப்பியுள்ள சுவாமிநாதன், விளையாட்டுத் துறையையும் வீரர்களின் எதிர்காலத்தையும் பாழாக்கும் இந்த அரசாணையை அரசு எவ்வித தாமதமுமின்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன