விளையாட்டு

உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் ஆய்வு: வசதிகளை மேம்படுத்த உத்தரவு!

புதுச்சேரி: புதுச்சேரி உப்பளத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் அரசுத்துறை உயர் அதிகாரிகளுடன் நேரில் சென்று விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக சீரமைத்து மேம்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குறிப்பாக மைதானத்தில் உள்ள தங்குமிடங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதிகளைச் சுகாதாரமான முறையில் பராமரிக்க அறிவுறுத்தினார். மேலும், மைதான வளாகத்தைச் சுற்றி அடர்ந்து வளர்ந்துள்ள புதர்களை உடனடியாக வெட்டி அகற்றி தூய்மைப்படுத்த ஆணையிட்டார்.

தொடர்ந்து மைதானத்தில் நடைபெற்று வரும் ஹாக்கி விளையாட்டுத் திடலின் மேம்பாட்டுப் பணிகளைப் பார்வையிட்ட அமைச்சர், அனைத்து பணிகளையும் தரமாகவும் விரைவாகவும் முடித்து விளையாட்டு வீரர்களின் பயிற்சி பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன