புதுச்சேரி

சௌமியா அன்புமணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற புதுச்சேரி பாமக தலைமை நிர்வாக குழு தலைவர்!

புதுச்சேரி: பாட்டாளி மக்கள் கட்சியின் புதுச்சேரி மாநில தலைமை நிர்வாக குழு தலைவராக புதிய பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சௌமியா அன்புமணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இச்சந்திப்பு புதுவை மாநில பாமக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸின் வழிகாட்டுதலின்படி, புதுச்சேரி மாநில தலைமை நிர்வாக குழு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இப்புதிய பொறுப்பினை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, சௌமியா அன்புமணியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். அப்போது அவருக்கு பொன்னாடை அணிவித்து, மார்பிளில் நேர்த்தியாக செதுக்கப்பட்ட விநாயகர் திருவுருவச் சிலையை நினைவுப் பரிசாக வழங்கி ஆசிகளும் வாழ்த்துகளும் பெறப்பட்டன.

இந்நிகழ்வின் போது புதுவை மாநில பாமகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சித் தோழர்கள் உடனிருந்தனர். புதுச்சேரி மாநிலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் களப்பணிகளை மேலும் தீவிரப்படுத்தி, மக்களின் உரிமைகளுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து பாடுபட இச்சந்திப்பில் உறுதி ஏற்கப்பட்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன