புதுச்சேரி

புதுவை பல்கலையில் சர்வதேச சுற்றுலா மாநாடு: சிற்றேட்டை வெளியிட்டார் துணைவேந்தர் பிரகாஷ்பாபு!

புதுச்சேரி, செப். 7:
புதுவைப் பல்கலைக்கழகத்தில் “சுற்றுலா அகாடமியா மற்றும் தொழில்துறையை இணைப்பது, இந்திய மற்றும் ஐரோப்பியக் கண்ணோட்டங்கள்” என்ற தலைப்பில் சர்வதேச அறிவியல் மற்றும் நடைமுறை மாநாடு நடைபெறுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் ‘SIPAS’ திட்டத்தின் கீழ் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லாட்வியா, போர்ச்சுகல் மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளின் ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பின் கூட்டாளர்களுடன் இணைந்து புதுவைப் பல்கலைக்கழக சுற்றுலா ஆய்வுத் துறை இம்மாநாட்டை வரும் 11-ஆம் தேதி வரை நடத்துகிறது. இம்மாநாட்டின் அதிகாரப்பூர்வ தகவல் சிற்றேட்டைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பிரகாஷ் பாபு முறைப்படி வெளியிட்டார்.

இந்நிகழ்வில் மேலாண்மைப் பள்ளி டீன் மற்றும் சி.சி.ஆர். இயக்குநர் (பொறுப்பு) பேராசிரியர் நடராஜன், துறைத் தலைவர் பேராசிரியர் சிபி பி.எஸ்., பேராசிரியர் வெங்கட ராவ், மாணவர்கள் நலன் டீன் பேராசிரியர் சம்பதா குமார் ஸ்வைன், SIPAS திட்ட மேலாளர் மற்றும் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அனுசந்திரன், திட்ட இயக்குநர் டாக்டர் ஷெர்ரி ஆபிரகாம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டிற்காக சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆய்வுச் சுருக்கங்கள் பெறப்பட்டுள்ளன. பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தங்களது ஆராய்ச்சி வெளியீடுகளின் விளக்கங்களை செப்டம்பர் 9 அன்று வழங்கவுள்ளனர். முன்னதாக செப்டம்பர் 8 அன்று புதுச்சேரி ஹோட்டல் அதிதியில் பங்குதாரர்கள் சந்திப்பு மற்றும் திட்ட விளக்கக் காட்சிகள் நடைபெறுகின்றன. மேலும், நமது நாட்டின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கலாச்சார கலை நிகழ்ச்சிகளுக்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன