புதுச்சேரி

புதுச்சேரியில் காதுகேளாதோருக்கான மாநில அளவிலான கைப்பந்து, கூடைப்பந்து போட்டிகள்: நெய்வேலி, திண்டிவனம் அணிகள் சாம்பியன்!

புதுச்சேரி, செப். 7: புதுச்சேரி ஸ்போர்ட்ஸ் கவுன்சில் பார் தி டெப் அமைப்பின் சார்பில், காதுகேளாதோருக்கான 6-வது மாநில அளவிலான கைப்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டிகள் புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் உள் விளையாட்டு அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றன.

இப்போட்டிகளில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இதில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் அபாரமாக விளையாடிய நெய்வேலி அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. புதுச்சேரி அணி 2-வது இடத்தையும், விழுப்புரம் அணி 3-வது இடத்தையும் பிடித்தன.

அதேபோல் விறுவிறுப்பாக நடைபெற்ற கைப்பந்து போட்டியில் திண்டிவனம் அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. இரண்டாம் இடத்தை விழுப்புரம் அணியும், மூன்றாவது இடத்தை புதுச்சேரி அணியும் தட்டிச் சென்றன.

போட்டியின் நிறைவு விழாவில் புதுவை விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை துணை இயக்குநர் வைத்தி லிங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்குக் கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

இந்நிகழ்வில் சரவணக்குமார், டாக்டர் பூவிழி, கற்பகம், டாக்டர் யபோலிகா, வழக்கறிஞர் லீலாவதி, வழக்கறிஞர் சரவணன், சங்க பொதுச்செயலாளர் பாசித், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சரவணக் ஐயப்பன், மதன் மோகன், அபில்லா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வீரர்களை வாழ்த்தினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன