அரசியல்

முதல்வர் அலுவலக மாற்றத்திற்கு ரூ.6.17 கோடி விரயமா? நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!

முதல்வர் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய மக்கள் வரிப்பணம் ரூ.6.17 கோடி செலவிடப்படுவதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாற்றம் தருவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜோசப் விஜய், தனது சொகுசு மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக தலைமைச் செயலகத்தில் 10-வது தளத்திற்கு முதல்வர் அலுவலகத்தை மாற்ற ரூ.6.17 கோடியை வீணடிப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் தெரியவந்துள்ளது. தலைமைச் செயலக கோட்டையில் போதிய வசதிகள் இருக்கும்போது, இவ்வளவு பெரிய தொகையைச் செலவிடுவது நியாயமற்றது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், “ஒருபுறம் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று கூறிவிட்டு, மறுபுறம் தற்காலிக அலுவலக மாற்றத்திற்கு இத்தனை கோடி விரயம் செய்யப்படுகிறது. விவசாயிகள் விளைவித்த நெல்லைப் பாதுகாக்க சேமிப்புக் கிடங்குகள் இன்றி தவிக்கும் வேளையில், இதுபோன்ற ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து, மக்களின் வாழ்வாதார நலன் காக்கும் ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு நிதியைப் பயன்படுத்த வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன