தமிழ்நாடு
புதிய சட்டப்பேரவை கட்டிடம் அமைக்க வேண்டும்: தமுமுன் அன்சாரி கோரிக்கை!
நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய சட்டப்பேரவை கட்டிடத்தை அமைக்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான தமுமுன் அன்சாரி வலியுறுத்தினார். மேலும் சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்தியாவில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் அல்லது அவர்கள் விரும்பும் வேறு நாடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
In brief (English)
Former lawmaker Thamimun Ansari requested the Tamil Nadu government to construct a modern assembly building and urged re-passing the anti-NEET resolution.

