தமிழ்நாடு

பள்ளிக்கரணை ராம்சார் சதுப்புநிலத்தை உடனடியாக அறிவிக்கை செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக்கரணை ராம்சார் சதுப்புநிலத்தை முறையாக அறிவிக்கை (Notification) செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி, ‘பசுமைத் தாயகம்’ அமைப்பின் சார்பில் விழிப்புணர்வுப் பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அன்புமணி ராமதாஸ், சதுப்புநிலப் பகுதிகளைப் பாதுகாப்பது தொடர்பாகத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டிய முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தார்.

அதில், சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக்கரணை ராம்சார் சதுப்புநிலத்தின் எல்லையையும், அதன் தாக்கப்பகுதிகளையும் (Zone of influence) தமிழக அரசு காலதாமதமின்றி உடனடியாக வரையறை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியை 2017-ஆம் ஆண்டின் ஈரநிலங்கள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை விதிகளின் கீழ் (Wetlands Rules 2017) உடனடியாக அறிவிக்கை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் நின்றுவிடாமல், பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியோடு இணைந்திருக்கக்கூடிய 65 சதுப்புநிலங்களையும் அதே விதிகளின் கீழ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கை செய்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன