தமிழ்நாடு
டாஸ்மாக் கடையில் கூடுதல் பணம் கேட்ட ஊழியர்கள்: குமரியில் வைரலாகும் வீடியோ!
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடையில் மதுபிரியர்களிடம் கூடுதல் பணம் வசூலிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. 140 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டிலுக்கு ஸ்டிக்கர் கட்டணம் 10 ரூபாய் சேர்த்து 150 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையிலும் மேலும் 5 ரூபாய் கூடுதலாக கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மதுபிரியர்கள் கடை ஊழியர்களுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பர பரப்பு ஏற்படுத்தி வருகிறது.
In brief (English)
Liquor buyers in Kanyakumari got into a heated argument with Tasmac shop employees for charging an extra five rupees over the printed rate.
