தமிழ்நாடு

தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமியுடன் லீமாரோஸ் மார்டின் எம்.எல்.ஏ தீவிர வாக்கு சேகரிப்பு!

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் திருமதி பானுமதி அவர்களை ஆதரித்து, கழகப் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தாராபுரம் தொகுதியில் நடைபெற்ற இந்த எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கழக மகளிரணி இணைச் செயலாளரும் லால்குடி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் லீமாரோஸ் மார்டின் MLA நேரில் கலந்துகொண்டு தொகுதி மக்களிடையே வாக்கு சேகரித்தார்.

மேலும், இந்நிகழ்வில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய கழக நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர். குறிப்பாக, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் தலைமை அரசு கொறடாவுமான ஆர். மனோகரன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் என். யோகநாதன், திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் டி.என். சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இவர்களுடன் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் மாவட்ட ஆவின் தலைவருமான சி. கார்த்திகேயன், கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான டி. ரத்தினவேல் உள்ளிட்ட கழக முக்கிய நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் திரளாகக் கலந்துகொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வருகையையொட்டி தாராபுரம் தொகுதி முழுவதும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது கழகத்தின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கி, வேட்பாளர் பானுமதியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன