புதுச்சேரி

புதுச்சேரி பனித்திட்டு கிராமத்தில் 2-ஆம் கட்ட கடல்பாசி அறுவடை: 5 டன் பாசி விற்பனை செய்து பெண்கள் சாதனை!

புதுச்சேரி, செப். 13:

புதுச்சேரி பனித்திட்டு மீனவ கிராமத்தில் இரண்டாம் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட கடல்பாசி வளர்ப்பு திட்டத்தில், குறுகிய காலத்தில் 5 டன் கடல்பாசி வெற்றிகரமாக அறுவடை செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மீனவப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பனித்திட்டு கிராமத்தில் கடல்பாசி வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் 2-ஆம் கட்ட திட்டப்பணியில் நடவு செய்யப்பட்ட கடல்பாசி, வெறும் 37 நாட்களில் முழு வளர்ச்சி அடைந்தது. இதனையடுத்து தீவிர அறுவடைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மொத்தம் 5 டன் கடல்பாசி பெறப்பட்டது.

அறுவடை செய்யப்பட்ட கடல்பாசி அனைத்தும் அறுவடை நடந்த இடத்திலேயே உடனடியாக முழுமையாக விற்பனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை மூலம் கிடைத்த வருவாயில் 90 சதவீதம் கடல்பாசி வளர்ப்பில் உழைத்த மீனவப் பெண்களுக்கும், மீதமுள்ள 10 சதவீதம் மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அப்பகுதி மீனவப் பெண்களிடையே பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன