புதுச்சேரி

விநாயகர் சதுர்த்தி விழா: பொது இடங்களில் சிலைகள் வைக்க உழவர்கரை நகராட்சி கடுமையான வழிகாட்டுதல்கள் வெளியீடு!

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது தொடர்பாக, உழவர்கரை நகராட்சி சார்பில் பல்வேறு முக்கியக் கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை விழா அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என்று உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து விழா நடத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையிடம் உரிய முன் அனுமதி பெறுவது கட்டாயமாகும். மேலும், நீர்நிலைகள் மற்றும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் வகையில், சிலைகள் செய்வதற்கு எவ்வித ரசாயனக் கலப்பும் இல்லாத இயற்கை மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழா நடைபெறும் இடங்களில் ஒலிபெருக்கிகள் (Loudspeakers) பயன்படுத்துவதற்கு காவல்துறையின் உரிய முன் அனுமதியைப் பெற வேண்டும். அதேபோல், வழிபாட்டுப் பகுதிகள் மற்றும் விழாப் பந்தல்களில் அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் அமைப்பாளர்கள் அனைவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு விதிகளை முழுமையாகப் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன