புதுச்சேரி

புதுச்சேரி அரசு அதிகாரிகள் இடமாற்றம்: ஏனாம் நகராட்சி ஆணையர் உழவர்கரைக்கு மாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேச நிர்வாகத்தில் அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு துணைநிலை ஆளுநர் உத்தரவின்பேரில் அதிகாரப்பூர்வ ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை (DPAR) சார்பில் அரசு சார்புச் செயலாளர் எஸ். முருகேசன் வெளியிட்டுள்ள உத்தரவில், ஏனாம் நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த திரு. ஐ. ராகவன் உடனடியாக உழவர்கரை வட்டார வளர்ச்சி அதிகாரியாக (BDO) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏனாம் நகராட்சி ஆணையர் பதவிக்கு அடுத்த உத்தரவு வரும் வரை, ஏனாம் பிராந்திய நிர்வாகியான திரு. சிவராஜ் மீனா கூடுதலாகப் பொறுப்பு வகிப்பார் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன