புதுச்சேரி

புதுச்சேரி பெத்தி செமினார் பள்ளி முதல்வருடன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சந்திப்பு: ராக்கெட் பயிற்சி பயிலரங்கிற்கு நன்றி!

புதுச்சேரி: புதுச்சேரி பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் ஆரோக்கியராஜ் அவர்களை, தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது பள்ளி முதல்வர் ஆரோக்கியராஜ், ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு பொன்னாடை அணிவித்து, மலர்க்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தார். இதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களிடையே விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள ‘மிஷன் ரூமி ட்வின் 2026’ ராக்கெட் ஏவுதலுக்கான பயிற்சிப் பயிலரங்கு குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது. குறிப்பாக, சுமார் 1,500 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறும் வகையில், இப்பயிற்சி பயிலரங்கிற்கு பள்ளியில் உரிய இடவசதி செய்து தந்ததற்காக முதல்வர் ஆரோக்கியராஜிடம் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

மேலும், புதுச்சேரியின் எதிர்கால வளர்ச்சி, நவீன உள்கட்டமைப்பு மற்றும் இளைஞர்களின் மேம்பாட்டிற்கான தொலைநோக்குப் பார்வைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட தனது ‘ரைசிங் புதுச்சேரி’ (Rising Puducherry) என்ற புத்தகத்தை பள்ளி முதல்வருக்கு அவர் அன்பளிப்பாக வழங்கினார். அப்போது கல்வி மற்றும் அறிவியல் துறையில் புதுச்சேரி மாணவர்களை முன்னெடுத்துச் செல்வது குறித்து இருவரும் கலந்துரையாடினர்.

இந்நிகழ்வின் போது, எல்.ஜே.கே. நிர்வாகப் பொதுச்செயலாளர் ராம்குமார், பொதுச்செயலாளர் டாக்டர் துரைசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். பள்ளி மாணவர்களின் விண்வெளி அறிவியல் திறனை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த ராக்கெட் ஏவுதல் பயிற்சி பயிலரங்கம் புதுச்சேரி கல்வி வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன