புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவையில் நிரவி-திருப்பட்டினம் எம்.எல்.ஏ. டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் கன்னி உரை!

புதுச்சேரி: புதுச்சேரி 16-வது சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், நிரவி–திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் தனது முதல் உரையை உணர்வுப்பூர்வமாக ஆற்றியுள்ளார்.

சட்டமன்றத்தில் மாண்புமிகு துணைநிலை ஆளுநர் அவர்களின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார். மக்கள் பிரதிநிதியாக சட்டப்பேரவையில் அவர் ஆற்றிய முதல் உரை இது என்பதால் அவையில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தனது உரையில், நிரவி-திருப்பட்டினம் தொகுதி பொதுமக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகள், அடிப்படைத் தேவைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விரிவாகப் பேசினார். தொகுதி மக்களின் குரலாக சட்டப்பேரவையில் தொடர்ந்து ஒலித்து, மக்கள் சேவை மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன் என்று அவர் உறுதியளித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன