புதுச்சேரி
தற்காப்பு கலை ஆசான்களுக்கு ஓய்வூதியம் வழங்க எம்.எல்.ஏ கோரிக்கை
புதுச்சேரியில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பம், அடிமுறை, சுருள்வாள் போன்ற தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு அரசு சார்பில் மாதாந்திர உதவித்தொகை மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்டின் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் வீர விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அரசு சார்பில் வீர கலை திருவிழா போட்டிகளை நடத்தி ரொக்கப் பரிசுகள் வழங்க வேண்டும் என்றும் அவர் புதுச்சேரி முதலமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளார்.
In brief (English)
MLA Jose Charles Martin appealed to the Puducherry CM to grant pensions for traditional martial arts trainers and 3% sports reservation in government jobs.
