புதுச்சேரி

மண்ணாடிப்பட்டு: 1,560 மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு காய்கறி விதைகள் – அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்!

புதுச்சேரி: புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட செட்டிப்பட்டு கிராமத்தில், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் புதுச்சேரி மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 1,560 மகளிருக்கு காய்கறி விதைகள் வழங்கும் நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு காய்கறி விதைகளை வழங்கினார். பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், வீட்டுத் தோட்டம் அமைத்து ஆரோக்கியமான சத்தான காய்கறிகளை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. A. சிவசங்கரன், இணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி. கலைமதி, துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் திரளான மகளிர் சுயஉதவிக் குழுப் பெண்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன