புதுச்சேரி

உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் பாஜகவில் இணைந்த திருக்கனூரைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர்!

புதுச்சேரி: புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட திருக்கனூர் பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் இளைஞர்கள் 30-க்கும் மேற்பட்டோர், புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர்.

திருக்கனூர் பகுதியைச் சேர்ந்த அருண் பேக்கரி சரவணன், கலியமூர்த்தி, அருண், நாஜிம், பாரதி, ரவிக்குமார், வினோத், மண்ணாடிப்பட்டு குமரன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். கட்சியில் புதிதாக இணைந்த அனைவருக்கும் உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் சால்வை அணிவித்து, வாழ்த்து கூறி கட்சியில் வரவேற்றார்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத்திட்டப் பணிகளால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் பலரும் பாஜகவில் இணைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது தொகுதி நிர்வாகிகள் மற்றும் கட்சிப் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன