புதுச்சேரி

மக்கள் தலைவர் ப. கண்ணன் பிறந்தநாள் விழா: முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

புதுச்சேரி, ஆக. 19: புதுச்சேரியின் முன்னாள் உள்துறை அமைச்சரும், சபாநாயகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மக்கள் தலைவர் ப. கண்ணன் அவர்களின் பிறந்தநாள் விழா இன்று அவரது இல்லத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவினை அவரது மகனும், ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விக்னேஷ் கண்ணன் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி கலந்துகொண்டு, மறைந்த தலைவர் ப. கண்ணனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மாநிலத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று தங்களது புகழஞ்சலியை செலுத்தினர். இடைக்கால சபாநாயகர் ஏ. அன்பழகன், அமைச்சர்கள் பி. ராஜவேலு, வி.பி. சிவக்கொழுந்து, எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.ஹெச். நாஜிம், திமுக மாநில அமைப்பாளர் இரா. சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர். விழாவில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் ப. கண்ணனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. ப. கண்ணனின் சேவைகளை போற்றும் வகையில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் நிகழ்வில், அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன