முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா: புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் மரியாதை

புதுச்சேரி, ஆக. 20: இந்தியாவை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பாதையில் முன்னோக்கி அழைத்துச் சென்ற பாரத ரத்னா, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா புதுச்சேரியில் இன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தலைவரின் திருவுருவச் சிலைக்குச் சென்ற காங்கிரஸ் நிர்வாகிகள், மாலை அணிவித்து தங்கள் மரியாதையை வெளிப்படுத்தினர். நவீன இந்தியாவின் சிற்பியாகக் கருதப்படும் ராஜீவ் காந்தியின் பங்களிப்புகளை நினைவு கூறும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது. ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினரிடையே மிகுந்த உற்சாகம் காணப்பட்டது.