மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும்: சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கோரிக்கை
கர்நாடக மாநிலம் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தனிநபர் தீர்மானம் கொண்டுவர அனுமதிக்க வேண்டுமென சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், தற்காலிக சபாநாயகர் அன்பழகனுக்கு கோரிக்கை மனு வழங்கியுள்ளார்.
மனுவில், மேகதாது பகுதியில் புதிய அணை கட்டப்பட்டால் காவிரி கடைமடை பகுதியான புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என்று கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே இந்த தீர்மானத்தை அரசு நிறைவேற்றி தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
In brief (English)
MLA Karthikeyan has petitioned the pro-tem speaker to allow a private resolution against Karnataka’s Mekedatu dam project, citing its threat to Karaikal farmers dependent on Cauvery water.

