புதுச்சேரி

காமராஜ் நகரில் சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் புதிய அலுவலகம் திறப்பு!

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்களின் புதிய தொகுதி அலுவலகம் சிறப்பு பூஜைகளுடன் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ரிப்பன் வெட்டி அலுவலகத்தைத் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி மக்கள் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்தார்.

இந்தத் திறப்பு விழா நிகழ்ச்சியில், முதலியார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் எல்.ஜே.கே. நிர்வாகப் பொதுச்செயலாளர் ராம்குமார், பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

காமராஜ் நகர் தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காணவும், நலத்திட்டப் பணிகளை விரைவுபடுத்தவும் இந்த புதிய அலுவலகம் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன