புதுச்சேரி

புதுவையில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது: திமுக அமைப்பாளர் சிவா கண்டனம்

வில்லியனூர் மார்க்கெட் பகுதியில் உள்ள அரிசிக் கடையில் மாமூல் கேட்டு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவா கடும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சியில் புதுவையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து ரவுடிகளின் கை ஓங்கியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். சிறு, குறு வியாபாரிகளை ரவுடிகள் மாமூல் கேட்டு மிரட்டுவதும், வெடிகுண்டு வீசுவதும் தொடர்கதையாகி வருவதாகவும், காவல்துறை எவ்வித அரசியல் தலையீடும் இன்றி சுதந்திரமாகச் செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மாமூல் கேட்டு வியாபாரிகளை அச்சுறுத்தும் சமூக விரோதிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.

In brief (English)

Puducherry DMK organizer R. Siva condemned the petrol bomb attack on a Villianur rice shop, stating that law and order has collapsed under the ruling coalition.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன