பென்காக் சிலாட் தற்காப்புக் கலை: தேசிய, சர்வதேச அளவில் பதக்கங்களை குவித்து தமிழக, புதுவை வீரர்கள் சாதனை
இந்தோனேசியாவை தாயகமாகக் கொண்ட பென்காக் சிலாட் தற்காப்புக் கலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இளம் வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்திய கூட்டமைப்பின் இணைச் செயலாளரும் தமிழக பொதுச் செயலாளருமான பயிற்சியாளர் ஜி.பி. மகேஷ் பாபுவின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெற்று வரும் இவர்கள், இக்கலையின் சிறப்புகள் குறித்து பகிர்ந்து கொண்டனர். கடலூரை தலைமையிடமாகக் கொண்ட தமிழ்நாடு சங்கம் மற்றும் புதுச்சேரி சங்கம் மூலம் 5 வயது முதல் 45 வயது வரையிலானவர்கள் இதில் பங்கேற்கலாம் என்றும், அடுத்த ஒலிம்பிக்கில் இது இடம்பெற வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. குத்துச்சண்டையில் இருந்து இந்த விளையாட்டிற்கு வந்த போஸ் ராஜகுரு, காண்டா பிரிவில் ஏசியன் மற்றும் தேசிய போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளதாகவும், நிர்மல் மற்றும் மதன்ராஜ் ஆகியோர் கல்லூரி படிப்போடு விளையாட்டையும் சமநிலையில் கையாண்டு பதக்கம் வென்றுள்ளதாகவும் கூறினர். மேலும் வியட்நாமில் நடைபெற்ற 10-வது ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்ரீகாந்த் உள்ளிட்ட வீரர்கள், இந்த தற்காப்புக் கலை தங்களுக்கு சுய ஒழுக்கம், உடற்தகுதி மற்றும் தற்காப்பு திறன்களை வழங்கியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
In brief (English)
Athletes practicing the Indonesian martial art Pencak Silat from Tamil Nadu and Puducherry have achieved major success in national and Asian championships. The players credited their coach GP Mahesh Babu for their discipline and international achievements.

