புதுச்சேரி

கதிர்காமம் தொகுதி: வழுதாவூர் சாலை முதல் கனகன் ஏரி வரை தூர்வாரும் பணியை தொடங்கினார் எம்.எல்.ஏ எஸ்.எஸ். அழகு!

புதுச்சேரி, ஆக. 19: புதுச்சேரி கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட வழுதாவூர் சாலை முதல் கனகன் ஏரி வரையிலான மழைநீர் வடிகால் கால்வாயைத் தூர்வாரும் பணிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். அழகு @ அழகானந்தம் நேரில் சென்று முறைப்படி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி பொதுப்பணித் துறை மூலமாக இப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் இப்பகுதியில் உரிய முறையில் தூர்வாரும் பணிகள் நடைபெறாமல் தூர்ந்து போயிருந்ததால், பருவமழைக் காலங்களில் மழைநீர் முறையாக வெளியேற முடியாமல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.

குறிப்பாக, தட்சிணாமூர்த்தி நகர் மற்றும் செல்வா நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் மழை நீரில் மூழ்கும் தொடர் அபாயம் நீடித்து வந்தது. பொதுமக்கள் எதிர்கொண்டு வந்த இந்த இடர்பாட்டை கனிவுடன் பரிசீலித்த எம்.எல்.ஏ எஸ்.எஸ். அழகு, பொதுப்பணித்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணியைத் தொடங்க நடவடிக்கை எடுத்தார். மழைக்கால பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் பணிகளைத் தொடங்கி வைத்த எம்.எல்.ஏ-விற்கு தட்சிணாமூர்த்தி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன