புதுச்சேரி

புதுச்சேரி திமுக மகளிர் அணி சார்பில் மருத்துவ முகாம்: மாநில அமைப்பாளர் இரா.சிவா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

புதுச்சேரி: புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) மாநில மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் மருத்துவ முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா தலைமை தாங்கினார். திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் அருள்செல்வி தியாகராஜன் முன்னிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாமை விரிவாகவும் சிறப்பாகவும் நடத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ராஜ் பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன், உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளர் எஸ்.கோபால், லாஸ்பேட்டை தொகுதி கழக செயலாளர் தியாகராஜன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன