தமிழ்நாடு

100 நாள் சாதனை: செய்தி மக்கள் தொடர்புத்துறை தயாரித்த ‘A New Beginning’ சிறப்பு புகைப்படத் தொகுப்பு நூலை வெளியிட்டார் முதல்வர் விஜய்

சென்னை, ஆக. 17:

தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘A New Beginning’ என்ற தலைப்பிலான பிரத்யேக புகைப்படத் தொகுப்பு நூலை (Coffee Table Book) தமிழ்நாடு முதலமைச்சர் எஸ். ஜோசப் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.

முதலமைச்சர் பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, இந்த காலகட்டத்தில் அவர் பங்கேற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், மக்கள் நலத் திட்டத் தொடக்க விழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் மற்றும் அதற்கான விளக்கக் குறிப்புகளுடன் இந்தத் தொகுப்பு நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் போது தலைமைச் செயலாளர் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை உயர் அதிகாரிகள் உடனிருந்து முதல்வரிடமிருந்து நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன