புதுச்சேரி

புதுச்சேரி பாஜக புதிய பொறுப்பாளர் கே.சுரேந்திரன் வருகை: கட்சி நிர்வாகிகளுடன் மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கம் தலைமையில் அறிமுக கூட்டம்!

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநிலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக தேசியச் செயலாளர் கே. சுரேந்திரன், புதுச்சேரி மாநில பாஜக தலைமை அலுவலகத்திற்கு இன்று வருகை தந்தார். அங்கு அவருக்கு கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, புதிய மாநிலப் பொறுப்பாளரை கட்சி நிர்வாகிகளுக்கு முறைப்படி அறிமுகம் செய்து வைக்கும் சிறப்பு அறிமுக விழா கூட்டம் மாநிலத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு புதுச்சேரி மாநில பாஜக தலைவர் வி.பி.ராமலிங்கம் தலைமை தாங்கி, கே. சுரேந்திரனை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி அரசின் பாஜக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சபாநாயகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில, மாவட்ட, அணிப் பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் திரளாகக் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன