தமிழ்நாடு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோழி விற்பனையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 31-ஆம் தேதி முதல் மொத்த மற்றும் சில்லறை கோழி விற்பனையாளர்கள் காலவரையற்ற கடைகள் அடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். கோழி வளர்ப்பு மற்றும் தீவனக் கட்டண உயர்வால் ஒரு கோழிக்கு 30 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுவதாக கோழி வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இப்போராட்டத்தால் தினமும் 30 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகம் பாதிப்படைவதுடன், பிராய்லர் கோழி தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.
In brief (English)
Poultry traders in Tamil Nadu and Puducherry have announced an indefinite strike starting July 31 over severe financial losses. The shutdown is expected to affect Rs 30 crore worth of daily trade.